follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP1வெள்ள அனர்த்த நிவாரணத்திற்காக கடற்படையினர் தயார் நிலையில்

வெள்ள அனர்த்த நிவாரணத்திற்காக கடற்படையினர் தயார் நிலையில்

Published on

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரண குழுக்கள் விழிப்புடன் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில், தென் மாகாணத்தின் பல பகுதிகளில் அனர்த்த நிவாரணக் குழுக்களை அனுப்பவும், திடீர் வெள்ளம் ஏற்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், அவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தத்திலிருந்து மீட்பதற்காக, தென் கடற்படை கட்டளை தலா ஒரு நிவாரணக் குழுவாக காலி, அக்குரஸ்ஸ, அத்துரலிய மற்றும் தவலம ஆகிய பகுதிகளுக்கும் கம்புருபிட்டிய பகுதிக்கு இரண்டு நிவாரணக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை, வெள்ள அபாயத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் மேலதிக நிவாரண குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ள

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

தாக கடற்படை தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மதுபான உரிமப் பத்திரம் வழங்கும் சூதாட்டம் குறித்து சஜித் கேள்வி

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக இது வழங்கப்பட்டு வருகிறது. இடைத்தரகர்கள் பணம் சம்பாதிக்கும் விதமாக...

யுக்ரைனில் போருக்காக சென்ற இராணுவ சிப்பாய்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

ரஷ்யா மற்றும் யுக்ரைனில் போருக்காக சென்றுள்ள இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய்களின் உறவினர்கள் இன்று(14) கொழும்பில் உள்ள...

புற்று நோய்க்கு வழிவகுக்கும் பூஞ்சை மசாலாப் பொருட்களை சாப்பிட வேண்டாம்

அதிகளவில் புற்றுநோயை உண்டாக்கும் பூஞ்சை காணப்படுவதால், சந்தையில் இருந்து வாங்கப்படும் அல்லது வீட்டில் சேமித்து வைக்கப்படும் தானியங்கள் மற்றும்...