follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP1யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிகாரி கைது

யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிகாரி கைது

Published on

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த ரந்தோலி பெரஹெராவில் கலந்து கொண்ட பெண் யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் மாபாகட வெவ வனவிலங்கு பிராந்திய அலுவலகத்தின் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாககிச்சூட்டு சம்பவம் இன்று (30) அதிகாலை 3.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த ரந்தோலி பெரஹெரா ஊர்வலத்தைத் தொடர்ந்து, பெண் யானை மகாவலி ஆற்றின் கரையில் சங்கிலியால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த அதிகாரி ‘சீதா’ எனும் 48 வயதுடைய யானையை, காட்டு யானை என்று தவறாக நினைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வனவிலங்கு பாதுகாப்புத் துறை கால்நடை மருத்துவர்களால் தற்போது யானைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

சிசு செரிய பஸ் சேவை எண்ணிக்கையை 2000 வரை அதிகரிக்க நடவடிக்கை

அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்கு மேலும் 500 சிசு செரிய பஸ் சேவைகளை வழங்கி அதன் எண்ணிக்கையை 2000...

வெசாக் அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்

வெசாக் பண்டிகையின் போது செய்யப்படும் பல்வேறு அலங்காரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுற்றாடல்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கண்டி,...