நீங்களும் ONLINE LOAN எடுப்பவரா? அப்படியானால் இதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்

1460

சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் ஆன்லைன் முறைகள் மூலம் அதிக வட்டிக்கு எந்தவித சட்ட கட்டமைப்பும் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆன்லைன் நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டோர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது ஆன்லைன் முறைகள் மூலம் உடனடி கடன் வழங்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றி பேசப்படுகிறது.

இவ்வாறான நிறுவனங்களில் உடனடி கடன் பெற்ற சிலர் தாம் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை கூட சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையவழி முறைகள் மூலம் கடன் பெற்று அசௌகரியங்களுக்கு உள்ளானவர்கள் ஒன்றிணைந்து இணைய நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களின் சங்கம் என்ற சங்கத்தை உருவாக்கி நேற்று (01) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here