ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவை நிராகரித்தது ICC

601

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் விளையாட்டு அமைச்சு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்காக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவை சர்வதேச கிரிக்கெட் பேரவை நிராகரித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி, உரிய நியமனம் ஏற்கப்பட மாட்டாது என ஐசிசி தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையுடன் மாத்திரம் இணைந்து செயற்படுவதாகவும், விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவிற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமெனவும் ஐ.சி.சி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் மீண்டும் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு கடிதம் அனுப்பியுள்ள விளையாட்டு அமைச்சர், விளையாட்டு சட்டத்தின் பிரகாரம் இலங்கையிலுள்ள அனைத்து விளையாட்டு சங்கங்களையும் கண்காணிக்கும் அதிகாரம் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் தேசிய கணக்காய்வு திணைக்களம் மேற்கொண்ட தணிக்கை அறிக்கைகள் உள்ளிட்ட உண்மைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு சரியாக தெரிவிப்பதே இந்த குழுவின் முக்கிய நோக்கம் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஐசிசிக்கு விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here