நீங்கள் ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக்கை விரட்ட முயற்சிக்கிறீர்களா?

524

ஒன்லைன் முறைமைகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தை கொண்டு வருவதன் மூலம் நாடு பாரதூரமான சூழலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (03) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கூகுள், பேஸ்புக் போன்ற பலம் வாய்ந்த சமூக ஊடகங்கள் ஏற்கனவே இந்த சட்டமூலத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

“ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு பற்றி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, இப்போது என்ன தான் நடந்துள்ளது?
ஆப்பிள், அமேசான், கூகுள், மெட்டா, எக்ஸ், புக்கிங்.காம் போன்றவற்றை உள்ளடக்கிய ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பு கடும் ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.

இப்போது அவர்களையும் துரத்த முயல்கிறார்கள். அவர்களை விரட்டி, ஒரு நாட்டில் அன்னிய முதலீட்டை ஊக்குவிக்க முடியுமா? இந்த பன்முக நடவடிக்கைகள் என்ன?

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்… இது ஒரு சர்வாதிகார திட்டம்..”

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here