ஊடகங்களே முடிவெடுங்கள் – ஜனாதிபதி

682

சர்வதேச உடன்படிக்கையில் ஈடுபடுவதா, இல்லை என்றால் நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா என்பது தொடர்பில் சமூக ஊடகங்கள் உட்பட இந்நாட்டின் அனைத்து ஊடகங்களும் கலந்துரையாட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான ‘திவயின’ பத்திரிகையின் ஆரம்ப ஆசிரியரும் ஆசிரியர் பணிப்பாளருமான எட்மண்ட் ரணசிங்க சுரின் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வில் நேற்று(03) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தின்படி நாட்டின் ஊடகத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் ஆரம்பிக்கப்படவுள்ள வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தனது வாழ்க்கைப் பயணத்தில் தற்போது 93 வயதாகும் ரணசிங்க அவர்களின் ஏழு தசாப்த கால ஊடகப் பணியைப் பாராட்டி தொகுக்கப்பட்ட ‘எட்மண்டின் செய்தித்தாள் புரட்சி’ புத்தகமும் வெளியிடப்பட்டது.

இந்நூலை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் டபிள்யூ. எம். கே. விஜேபண்டார, பிரதி ஊடகப் பணிப்பாளர் தீப்தி அதிகாரி ஆகியோரால் தொகுக்கப்பட்டது.

மூத்த ஊடகவியலாளர் எட்மன் ரணசிங்கவை இந்நாட்டில் ஊடகவியலில் மாற்றத்தை ஏற்படுத்திய விமானி என அழைக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஏழு தசாப்த கால ஊடகப் பணியில் ஈடுபட்ட எட்மன் ரணசிங்கவின் ஊடகக் கலை இலங்கையின் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு நாட்டிலும் ஊடகங்கள் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டே செயற்படுகின்றன, ஆனால் சமூக ஊடகங்கள் தோன்றியதன் பின்னர் அவர்கள் விரும்பியதை தமது விருப்பத்திற்கேற்ப வெளியிடுவதற்கு செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், ஊடகக் கலையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பங்களிக்கும் என்பதை ஆராய்வதன் மூலம் பயனுள்ள ஊடகக் கலையை உருவாக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here