follow the truth

follow the truth

May, 16, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமைத்திரி பயணித்த கார் மீது தடுப்பு விழுந்தது குறித்து விசாரணை

மைத்திரி பயணித்த கார் மீது தடுப்பு விழுந்தது குறித்து விசாரணை

Published on

மத்திய அதிவேக வீதியின் குருநாகல் இடைப்பாதையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த கார் மீது, பணம் செலுத்தும் நுழைவாயிலில் இருந்த தடுப்பு விழுந்தமை குறித்து பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமையே இதற்குக் காரணம் என உயர் பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு முறையும் குறித்த பணம் செலுத்தும் நுழைவாயிலில் ஒரே அதிகாரி தான் இருந்தாரா? அல்லது இந்த நிகழ்வு தற்செயலானதா? என பாதுகாப்பு தரப்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (04) முற்பகல் குருநாகல் மாற்றுப்பாதையில் உள்ள பணப்பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் முன்னாள் ஜனாதிபதி பயணித்த காரின் மீது இவ்வாறு தடுப்பு விழுந்துள்ளது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“நளீன் ஹேவகேவின் மனைவி கர்ப்பம் தரித்தால் அதுவும் முன்னைய ஆட்சியின் வேலையே..”

மறுமலர்ச்சி ஆட்சியில் வெறுமனே ஏழு மாதங்களில் உப்பு பக்கட் 400 ருபாவை தாண்டியுள்ளதாக முன்னாள் வர்த்தக அமைச்சர் விமல்...

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...