மாத்தறை – அக்குரஸ்ஸ, தியலபே மலைப்பகுதியில் இன்று (05) மீண்டும் ஏற்பட்ட மண்சரிவினால் சுமார் 15 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
தியலபே மலைப்பகுதியில் வாழ்ந்த 30 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் எவ்வித உயிர் ஆபத்துகளும் ஏற்படவில்லை எனவும் மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
மண்சரிவு தொடர்பில் ஆராய்வதற்காக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகத்தின் குழுவொன்று அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.