follow the truth

follow the truth

May, 17, 2024
Homeவிளையாட்டுஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு பரிந்துரை

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு பரிந்துரை

Published on

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக 1900ஆம் ஆண்டு பெரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் விளையாடப்பட்ட கிரிக்கெட், 128 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒலிம்பிக்ஸில் இடம்பெறவுள்ளது.

கிரிக்கெட்டுடன் சேர்த்து பேஸ்போல், ஸ்குவாஷ் உள்ளிட்ட சில விளையாட்டுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டம் மும்பையில் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட புதிய விளையாட்டுகளைச் சேர்ப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் இருபதுக்கு 20 போட்டியாக நடத்தப்படலாம் என சர்வதேச கிரிக்கெட் பேரவை பரிந்துரைத்துள்ளது.

WhatsApp: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன்

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை நிர்வாக சேவையில் (ஓய்வு பெற்றவர்)...

ஈரானுக்கு எதிராக இலங்கைக்கு அபார வெற்றி

மத்திய ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் 2024 (Central Asian Volleyball Championship 2024 ) இன் ஆரம்ப சுற்றில்,...

2வது அரையிறுதிப் போட்டிக்கு மேலதிக நாள் வழங்கப்படாது

2024 இருபதுக்கு20 உலகக்கிண்ண போட்டியில் அரையிறுதி போட்டி நடைபெறவுள்ள தினத்துக்கு மாற்று தினம் ஒன்று வழங்கப்பட மாட்டாது என...