follow the truth

follow the truth

May, 7, 2025
Homeவணிகம்HNB FINANCE PLC - Auto Miraj மூலம் HNB FINANCE லீசிங் வாடிக்கையாளர்களுக்கு பல...

HNB FINANCE PLC – Auto Miraj மூலம் HNB FINANCE லீசிங் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள்

Published on

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, வாகன சேவைத் துறையில் முன்னணி நிறுவனமான Auto Miraj உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதுடன், HNB FINANCE தனது லீசிங் வாடிக்கையாளர்களுக்கு பல தனித்துவமான நன்மைகளை வழங்குகிறது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று ஒக்டோபர் 4ஆம் திகதி இரு தரப்பினரும் நாவலையிலுள்ள HNB FINANCE தலைமை அலுவலகத்தில் கைச்சாத்திட்டனர்.

HNB FINANCEஇன் முகாமைத்துவ பணிப்பாளர் சமிந்த பிரபாத், Auto Miraj நிறுவனத்தின் பிரதித் தலைவர் ரமித் சரத்சந்திர, Auto Miraj நிறுவனத்தின் நிதிப் பணிப்பாளர் விராஜ் மெண்டிஸ், செயற்பாட்டுத் தலைவர் சுரேன் ரொட்ரிகோ, சந்தைப்படுத்தல் முகாமையாளர் யொஹான் காளிதாச மற்றும் HNB FINANCEஇன் பிரதி நிறைவேற்று அதிகாரி மதுரங்க ஹீன்கெந்த, பிரதி பொது முகாமையாளர் பெத்தும் சம்பத் மற்றும் லீசிங் பிரிவின் பிரதான முகாமையாளர் அரோஷ் ஷானுக ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த ஒப்பந்த காலத்தில் Auto Mirajக்கு வருகை தரும் HNB FINANCE வாடிக்கையாளர்களுக்கு HNB FINANCE பல பிரத்யேக தள்ளுபடிகள் மற்றும் வசதிகளை வழங்கும்.

இதன்படி, HNB FINANCE லீசிங் வாடிக்கையாளர்களின் முதல் வாகன சேவைக்கு எவ்வித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது மற்றும் வாகனத்திற்கான இரண்டாவது சேவைக்கு கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கப்படும். மூன்றாவது சேவையின் போது உழைப்புக் கட்டணம் (Labour Charge) வசூலிக்கப்படாது. மேலும், இந்த தள்ளுபடிகள் கார் கீறல் பழுதுபார்த்து சரி செய்வதற்கு 25% தள்ளுபடியும், கார் பொலிஷ் மற்றும் உட்புற சுத்தம் செய்வதற்கு 25% தள்ளுபடி மற்றும் பிற சேவைகளுக்கு 50% தள்ளுபடி உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த HNB FINANCE இன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், “எங்கள் லீசிங் வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குவதற்காக Auto Miraj நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இனிமேல், எங்களின் லீசிங் சேவையுடன் இணைந்த வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு நியாயமான விலையில் மிகவும் திறமையான மற்றும் உயர்தர வாகன பராமரிப்பு சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். முந்தைய சேவைகளில் உள்ள குறைபாடுகளை நன்கு மதிப்பிட்டு, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்த முடிந்தது, மேலும் லீசிங் வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு தள்ளுபடிகள் வழங்குவதுடன், அவர்கள் சிறந்த அளவில் பராமரிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சவாலான நேரங்களிலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சலுகைகளை வழங்குவதற்கான எங்களது வலுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

No description available.

HNB FINANCE மற்றும் Auto Miraj ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உகந்த சேவையை வழங்குவதில் தொடர்ந்து உறுதியாக உள்ளன. இந்த ஒத்துழைப்பின் மூலம், அதன் வாடிக்கையாளர்களின் தேவைகளை உகந்த முறையில் பூர்த்தி செய்வதன் மூலம் நீண்ட காலத்திற்கு வாடிக்கையாளர் உறவுகளை வலுப்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக...

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி...