காஸா மோதல் அதிகரித்தால் இலங்கையும் பாதிக்கப்படலாம்

1098

காஸா பகுதியில் மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்தால் அதன் விளைவுகள் இலங்கையையும் தாக்கலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, நாட்டின் ஏற்றுமதி துறை கடுமையாக பாதிக்கப்படலாம் என பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையின் மூத்த பேராசிரியர் ஆனந்த விக்கிரம தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல், பலஸ்தீனம், லெபனான் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளில் பல இலங்கையர்கள் வேலையில் இருப்பதனால், அந்த பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டால், இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை கூட இழக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

WhatsApp: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here