இரவு நேரங்களில் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் சோதனை நடத்த தீர்மானம்

972

பகிடிவதைகளை தடுக்கும் நோக்கில் இரவு நேரங்களில் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் சோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

விடுதிகளில் பெரும்பாலும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் புதிய மாணவர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வுகளுக்கு பல்கலைக்கழக ஒழுங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாணவர் ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பல்கலைக்கழகங்களில் கொடுமைப்படுத்துதலை தடுக்க தேசிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பகிடிவதைகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க வாட்ஸ்அப் எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த எண்ணுக்கும் முறைப்பாடுகள் பெறப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த எண்ணில் வரும் ஒவ்வொரு முறைப்பாடும் உடனடியாக விசாரிக்கப்படும் என்றார்.

WhatsApp: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here