இப்ராஹிம் ரைசிக்கும் சவுதி இளவரசருக்கும் இடையே மோதல்கள் பற்றிய கலந்துரையாடல்

1877

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கும் இடையில் இஸ்ரேல் – பலஸ்தீன மோதல்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (11) தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பலஸ்தீனத்திற்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், உயிருடன் இருந்தாலும் ஒவ்வொரு ஹமாஸ் உறுப்பினரும் இறந்தவர் தான் என தெரிவித்துள்ளார்.

அல்-அக்ஸா தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலில் உத்தியோகபூர்வ போர் நிலை அறிவிக்கப்பட்டது, அதே நேரத்தில் உருவாக்கப்பட்ட தற்காலிக போர் அமைச்சரவையில் உரையாற்றும் போதே பெஞ்சமின் நெதன்யாகு இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

WhatsApp: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here