பசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சர் பதவி

520

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகத் தலைவர் பஷில் ராஜபக்ஷ, எதிர்வரும் 6ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஷில் ராஜபக்ஷ, அன்றைய தினமே பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிதி அமைச்சராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாகவும், சிங்களப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் ஊடாகவேவ பஷில் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார, தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதுடன், அந்த இடத்திற்கு பஷில் ராஜபக்ஷ, நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here