“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கைகள் நம்பகத்தன்மை அற்றது”

386

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நேரம் போதாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு ஏழிலிருந்து எட்டு நிமிடங்களே அவகாசம் தருவதாகக் கூறிய முன்னாள் ஜனாதிபதி, நேரத்தை நியாயமாகப் பகிர்ந்தளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதனால் எங்களது எம்.பி.க்கள் கடும் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

“.. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் எந்தவொரு குழுவுக்கும் வழங்க முடியாத இரகசிய அறிக்கை தங்களிடம் இருப்பதாகவும், அந்த அறிக்கையினை எச்சந்தர்ப்பத்திலும் யாருக்கும் வழங்க முடியாதென்றும், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆலோசகர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

அடுத்தபடியாக நான் நியமித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை கையளிக்கும் போது. ஆணைக்குழுவின் ஆணையாளர் இதன்போது தனியாக ஒரு கோப்பினை எடுத்து அப்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு வழங்கி இதனை சட்டமா அதிபருக்கோ, புலனாய்வுப்பிரிவு கொடுக்கவும் வேண்டாம், பொலிசுக்கோ, சீ.ஐ.டி இற்கோ வழங்கவும் வேண்டாம் என்றும் இதனை தாங்கள் இரகசியமாக் வைத்திருக்குமாறும் கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆலோசகர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன அவர்கள் தங்களிடம் ஒரு அறிக்கை இரகசியமாக உள்ளதாக கூற, மறுபக்கம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது இரகசியமாக வைத்திருக்க மற்றுமொரு கோப்பு..

ஆதலால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரைக்கும் நடத்திய விசாரணைகள் அனைத்தும் முற்றிலும் நியாயமற்றதும் பிழையான வழிகாட்டலுமே என்று நான் கூற விரும்புகிறேன். ஏனெனில் அவை முழுமை பெற்ற அறிக்கைககள் அல்ல.

இன்னும், செனல் 4 அலைவரிசையின் ஆவணப்படம் தொடர்பில் இது குறித்த காரணங்கள் தொடர்பில் பாராளுமன்ற குழு நியமிப்பு தொடர்பிலும் எதிர்க்கட்சித்தலைவரின் நிலைப்பாட்டிலேயே நானும் இருக்கிறேன். ஏனெனில், காரத்தினால் அவர்களின் நிலைப்பாட்டில் அல்ல, ஏனெனில் இந்த பாராளுமன்றில் இதற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தெரிவுக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு என்னுடன் முரண்பாட்டில் உள்ள உறுப்பினர்களையே நியமித்தனர். அந்தக் கால கட்டத்தில் அரசியலில் இருந்த உள்ளக முரண்பாடுகள் காரணமாக அந்த தெரிவுக்குழு முழுமையாக சுயாதீனமாக இல்லாமல் பழிவாங்கும் ஒரு குழுவாகவே இருந்தது. தெரிவுக் குழுவுக்கு தலைமையினையும் உறுப்பினர்களையும் சபாநாயகர் தெரிவு செய்யுமாயின் அதற்கு நான் இணங்குகிறேன்..”

  • ஆர்.ரிஷ்மா 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here