ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் விற்பனையில் வெளிநாட்டு நிறுவனம்?

407

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் விற்பனைக்கு எதிராக அடுத்த மாதம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நாட்களில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சொத்துக்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதாக அதன் தலைவர் ஜகத் குருசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் ஜகத் குருசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“டெலிகாம் நிறுவனத்தின் மதிப்பை நிர்ணயிக்க international finance corporation எனும் நிறுவனம் அனுப்பப்பட்டுள்ளது. இது என்ன நிறுவனம்? உலக வங்கியுடன் தொடர்புடைய நிறுவனம். இந்த நிறுவனத்தின் பொறுப்புகள் என்ன? இந்த நிறுவனத்தின் பொறுப்புகள் தனியாருக்கு கடன் வழங்குகின்றதாகும். தனியார் முதலீடுகளுக்கு கடன் கொடுக்கும் நிறுவனத்தினை கொண்டு வந்து டெலிகாம் நிறுவனத்தின் சொத்துக்கள் கணக்கிடப்படுகின்றது. இது பாரிய மோசடி என எங்களுக்கு தெளிவாகத் தெரிகின்றது..”

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here