மறு அறிவிப்பு வரும் வரை ஈராக் செல்ல வேண்டாம் என தனது குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈராக்கில் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தனது குடிமக்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.
ஈராக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு ஈராக் அரசாங்கம் உதவ மாட்டார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியதையடுத்து, ஈராக் உள்ளிட்ட பிராந்திய நாடுகளில் அமெரிக்க வீரர்கள் தாக்கப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் தங்கள் குடிமக்களை லெபனானுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா அறிவுறுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.