ஹம்பாந்தோட்டை முருதுவெல குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் ஊருபொக ஓயாவிற்கு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
முருதாவெல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று இரவு திறக்கப்பட வாய்ப்புள்ளதாக அதன் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர குறிப்பிட்டுள்ளார்.
நீர்த்தேக்கத்திற்கு கீழே உள்ள ஊருபோக்கு ஓயாவின் இருபுறமும் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டுமென சுகீஸ்வர மேலும் குறிப்பிட்டுள்ளார்.