உலகின் மிகவும் வயதான நாய் மரணம்

172

உலகின் வயதான நாய் என கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த ‘போபி’ (Bobi) உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘போபி’ கடந்த 22ம் திகதி இறந்துள்ளது. ‘போபி’ இறக்கும் போது அதுக்கு 31 வயதாகும். ஒரு நாயின் சராசரி ஆயுட்காலம் சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.

‘போபி’ என்பது போர்ச்சுகீசிய Rafeiro do Alentejo எனும் நாய் இனமாகும்.

கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ‘போபி’ உயிரிழந்ததாக ‘போபி’ இனது உரிமையாளர் லியோனல் கோஸ்டா ஊடகங்களுக்கு உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த Rafeiro do Alentejo இன நாய் கடந்த கடந்த 1992-ம் ஆண்டு மே 11-ம் திகதி பிறந்தது. ‘போபி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நாய் உலக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here