follow the truth

follow the truth

May, 15, 2024
HomeTOP1முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிணை

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிணை

Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பிணை வழங்கியுள்ளது.

குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நடைபெறும் போது முன்னாள் பிரதமர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என நம்பிக்கை வெளியிட்ட நீதிமன்றம் இவ்வாறு பிணை வழங்க தீர்மானித்துள்ளது.

73 வயதான நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். 2017 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் பதவியை இழந்தார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர் ‘தாரிக் இ இன்சாப்’ கட்சியின் தலைவர் இம்ரான் கான்.

பாகிஸ்தானை விட்டு வெளியேறி கிளாண்டனில் 4 ஆண்டுகள் வசித்து வந்த நவாஸ் ஷெரீப், கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் திரும்பினார்.

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

கப்பல் மோதி விபத்திற்குள்ளான பாலம் வெடி வைத்து தகர்ப்பு

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் கன்டெய்னர் கப்பல் மோதியதில் சேதமடைந்த பாலம் வெடிவைத்து முழுமையாக தகா்க்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த...

T20 சகலதுறை வீரர்கள் தரவரிசையில் வனிந்து ஹஸரங்க முதலிடத்தில்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு 20 ஓவர் சகலதுறை வீரர்கள் தரவரிசையில், இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட்...

விஞ்ஞானப் பாட வினாத்தாளில் 02 வினாக்களுக்கு இலவசப் புள்ளி

சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளில் இரண்டு வினாக்களுக்கு இலவசப் புள்ளிகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. விஞ்ஞான...