follow the truth

follow the truth

May, 5, 2025
HomeTOP1அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலி

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலி

Published on

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் லூயிஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 முதல் 60 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று (25) இரவு உணவகம், விளையாட்டுப் பாதை உள்ளிட்ட பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இறந்தவர்களைத் தவிர, கிட்டத்தட்ட 60 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ராபர்ட் கார்ட் என்ற சந்தேக நபர், இராணுவத்தினரால் துப்பாக்கி பயிற்றுவிப்பாளராக பயிற்சி பெற்றவர் என தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லூயிஸ்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...