follow the truth

follow the truth

September, 13, 2024
HomeTOP1"சாகராவுக்கு மூளை இல்லை.. மூளையை சோதனை செய்யுங்கள்.."

“சாகராவுக்கு மூளை இல்லை.. மூளையை சோதனை செய்யுங்கள்..”

Published on

அமைச்சுப்பதவி வழங்காமை தவறு என்று குறைத்துக் குறைத்து இருக்காது அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சியில் அமருமாறு தான்
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அவர்களுக்கு சவால் விடுவதாக புதிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

விவசாய விடயதானத்திற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சை வழங்குவதற்கு பதிலாக வேறு விடயதானங்கள் உள்ளதா என சாகர காரியவசத்திடம் கேட்பதாகவும் லன்சா கேள்வி எழுப்பியிருந்தார்.

அவருக்கு மூளை சரியில்லை எனவும் அதனை உடனடியாக பரிசோதிக்க வேண்டும் எனவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிமல் லன்சா தெரிவித்தார்.

அதேவேளை, இன்று அமைச்சுப் பதவிகள் பற்றிப் பேசும் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த மாமா தனக்கு பல அமைச்சுப் பதவிகளையும் இராஜாங்க அமைச்சுப்பதவியையும் வழங்கிய போது இன்று சொல்வதை ஏன் அன்று கூறமுடியாமை குறித்து தான் என வியப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றுகையில் நிமல் லான்சா;

“முடிந்தால் அரசாங்கத்திலிருந்து வெளியே சென்று அந்தப் பணியைச் செய்யுமாறு சாகர காரியவசம் அவர்களுக்கு நான் சவால் விடுகிறேன். ஜனாதிபதி நல்லவராக இல்லாவிட்டால், ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியாத நிலை ஏற்பட்டால், ஜனாதிபதி அவர் சொல்வதைச் செய்யாவிட்டால், அவர் விரும்பிய முடிவை எடுக்க முடியும். ஊடகங்களில் கருத்து தெரிவிக்காமல் தமது தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருகிறேன்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நாமல் ராஜபக்சவுக்கு எத்தனை அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன? எத்தனை இராஜாங்க அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டன? எத்தனை விடயதானங்கள் கொடுக்கப்பட்டன? அப்போது அமைச்சர்களை மாற்றினாலும் நாட்டின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது என்பது அவருக்குப் புரியவில்லையா? அவருக்கு இப்போது புரிந்துவிட்டது.

ஜனாதிபதி கோட்டாபயவின் காலத்தில் அந்த பதவி மாற்றங்கள் மற்றும் அமைச்சரவை திருத்தங்கள் நான்கு தடவைகள் மாற்றப்பட்டுள்ளன. கடந்த அமைச்சரவை மாற்றத்தில் ஏராளமான அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் தூக்கி எறியப்பட்டனர். அன்று நாமல் ராஜபக்ஷவோ சாகர காரியவசமோ பேசவில்லை. அன்றே பேசியிருக்க வேண்டும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எங்களிடம் கேட்காமல் அவ்வாறு செய்தது தவறு என்று.. நான் அதற்கு முற்றிலும் எதிரானவன் என்று சொல்லியிருக்க வேண்டும். அன்று அவர்கள் பூனைக்குட்டிகளைப் போல இருந்தனர்.

எந்த பதவியையும் மாற்றி எதுவும் ஆகாது என்று அன்று சொல்லியிருந்திருக்கலாம். அப்போது சொல்லவில்லை. எனவே, நாமல் ராஜபக்ஷ மற்றும் சாகர காரியவசம் ஆகியோருக்கு நான் சொல்ல வேண்டும், முடிந்தால் பொய்களை கூறாமல் கடந்த காலத்தை மறக்காமல் என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள்.

கடந்த காலங்களில் அமைச்சுகளை மாற்றியவர்கள், பேச்சை மாற்றியவர்கள், எப்படி அதிக அதிகாரத்தை எடுத்தார்கள், தனக்கு பதவி வரும் போது மட்டும் வாயை மூடிக் கொண்டு எப்படி பதவியை வாங்கினார்கள் என்பது பற்றியும் பேசுங்கள்.

அமைச்சர்கள் சபை என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியையோ குறிக்கவில்லை. அமைச்சர்கள் குழு என்பது அமைச்சர்களின் கூட்டு சபை ஆகும். ஒருவர் அதன் விடயதானங்களில் முன்னும் பின்னுமாக செல்லலாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியா பொஹொட்டுவயா என்று ஆராயத் தேவையில்லை..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விவாகரத்து செய்யப்பட்ட துபாய் இளவரசியிடம் இருந்து “Divorce” என்ற வாசனை திரவியம்

சமீபத்தில், துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஹயா பின்ட் அல் ஹுசைன் இளவரசி, தனது கணவர் ஷேக் முகமது...

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி...

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்ற உத்தரவு

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை இன்று (13) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம்...