VIDEO : கொழும்பு – புறக்கோட்டையில் தீ : 15 பேர் வைத்தியசாலையில்

594

கொழும்பு – புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களம் 07 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்தில் பெண் ஒருவர் உட்பட 15 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

06 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here