கஜகஸ்தானில் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கஜகஸ்தானில் உள்ள ஒரு பெரிய எஃகு உற்பத்தி சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டது மற்றும் தீ விபத்து ஏற்பட்ட போது 252 தொழிலாளர்கள் அங்கு இருந்ததாக கூறப்படுகின்றது.
மேலும் 18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கஜகஸ்தானின் சுரங்க நடவடிக்கைகள் தேசியமயமாக்கப்பட்ட அதே நாளில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.