follow the truth

follow the truth

September, 13, 2024
HomeTOP1ரூ20,000 கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ரூ20,000 கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Published on

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் இந்த போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவைகள், மாகாண அரசாங்க சேவைகள் உட்பட பலர் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இன்று பகல் 12.00 மணிக்கு மதிய உணவு வேளையில் இந்த போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு பின்னர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்தார்.

தொழிற்சங்க போராட்டங்களை ஒடுக்குவதே அரசாங்கத்தின் அடுத்த முயற்சி என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை நேரத்தில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம்

எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக...

அரச மற்றும் தனியார் சுகாதாரத்தை உள்ளடக்கிய விரிவான சுகாதார சேவைச் சட்டம் கொண்டுவரப்படும்

அரச மற்றும் தனியார் சுகாதாரத்தை உள்ளடக்கிய விரிவான சுகாதார சேவைச் சட்டம் கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ்...

2025 பெப்ரவரியில் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்

2025 பெப்ரவரிக்குள் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் ரூபாயின்...