இலங்கையில் பிறப்புக்களை விட அதிகரித்து வரும் இறப்புகள்

1736

இந்த நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்நிலைமை காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, 2012 ஜூலை முதல் 2013 ஜூன் வரை இலங்கையில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 125,626 ஆக பதிவாகியுள்ள போதிலும், 2022 ஜூன் முதல் 2023 ஜூன் வரை இலங்கையில் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை 190,600 என்று தெரிவிக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் நாட்டின் சராசரி ஆண்டு மக்கள் தொகை 144,345 ஆக குறைந்துள்ளதாகவும் அறிக்கைகள் காட்டுகின்றன.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் கூற்றுப்படி, பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, இறப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

எவ்வாறாயினும், இந்த மரணங்கள் படிப்படியாக அதிகரித்து வருவதற்கான காரணம் கண்டறியப்படவில்லை, மேலும் இந்த நாட்டில் கொவிட் பரவியதன் பின்னர் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தடுப்பூசி குறித்து பல்வேறு தரப்பினரிடையே பல்வேறு கருத்துகள் இருந்தாலும், இது தொடர்பாக இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

உலகில் சராசரியாக வருடாந்த இறப்பு எண்ணிக்கை 15 முதல் 45 வீதம் வரை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here