நாடாளுமன்றில் அழகான பணிப்பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் – இருவருக்கு குற்றப்பத்திரிகை

1317

நாடாளுமன்ற இல்ல பராமரிப்புத் திணைக்களத்தின் அழகிய பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட உதவி வீட்டுக்காப்பாளர் உள்ளிட்ட இரு அதிகாரிகளுக்கு பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சமிந்த குலரத்ன கடந்த வெள்ளிக்கிழமை (27) குற்றப்பத்திரிகையை கையளித்தார்.

குற்றப்பத்திரிகையை கையளித்த பின்னர் 14 நாட்களுக்குள் குற்றச்சாட்டு தொடர்பான காரணங்களை சமர்ப்பிக்குமாறு பதில் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

காரணங்கள் முன்வைக்கப்படாதவிடத்து, அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிகைகள் இருவரிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முறையான விசாரணையின் இறுதி அறிக்கையும் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழுவின் முன் நாடாளுமன்ற இல்ல பராமரிப்புத் திணைக்களத்தின் இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அண்மையில் சாட்சியமளித்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here