கொழும்பில் நேற்று விழுந்த மரம் அபாயமான மரங்கள் பட்டியலில் இல்லையாம்

591

கொழும்பு பிரதேசத்தில் அபாய நிலையில் உள்ள சுமார் 300 மரங்கள் அடங்கிய ஆவணம் தமக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

அந்த ஆவணத்தின் பிரகாரம் உரிய மரங்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபை மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

பேராதெனிய தாவரவியல் பூங்காவில் உள்ள ஒரு தாவர நிபுணர் உள்ளிட்ட குழுவினரால் தினமும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

கொள்ளுப்பிட்டியவுக்கும் பம்பலப்பிட்டியவுக்கும் இடையிலான டூப்ளிகேஷன் வீதியில் நேற்று மாலை மரத்தின் ஒரு பகுதி முறிந்து விழுந்துள்ளது.

இதனால் பல வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த மரம் ஆபத்தானது என அடையாளம் காணப்படவில்லை என கொழும்பு மாநகர சபை மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன மேலும் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here