follow the truth

follow the truth

May, 16, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாநாமலின் 'இளைஞர்களுக்கான நாளை' அறக்கட்டளையானது CEB இற்கு செலுத்தவுள்ள கட்டணம் மில்லியனில்?

நாமலின் ‘இளைஞர்களுக்கான நாளை’ அறக்கட்டளையானது CEB இற்கு செலுத்தவுள்ள கட்டணம் மில்லியனில்?

Published on

2014 ஆம் ஆண்டு ‘இளைஞர்களுக்கான நாளை’ அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை பொசன் பிராந்தியத்திற்கு இலங்கை மின்சார சபையில் இலிருந்து பெறப்பட்ட 2 ஜெனரேட்டர்களுக்கு செலுத்தப்படவுள்ள 1,112,889.14 ரூபாய் இதுவரையில் வழங்கப்படவில்லை என இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பொசன் வளையத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு ஜெனரேட்டர்கள் தொடர்பாக WAS/PP/TCN/01 மற்றும் 2014-05-29 திகதியிடப்பட்ட ரூபா 1,522,889.14 பெறுமதியான திட்டத்திற்கு குறித்த அமைப்பினால் 400,000 ரூபாவை முன்பணமாக இலங்கை மின்சார சபைக்கு செலுத்தியுள்ளது.

மீதமுள்ள நிலுவைத் தொகையான ரூ. 1,112,889.14 ஐ செலுத்துமாறு இலங்கை மின்சார சபை 25-03-2019 அன்று கடிதம் மூலம் அறிவித்திருந்தது.

பொசன் பிராந்தியத்திற்கு 380KVA இன் 2 ஜெனரேட்டர்கள், 350KVA இன் 1 ஜெனரேட்டர், 300KA இன் 2 ஜெனரேட்டர்கள் மற்றும் 250KVA இன் 2 ஜெனரேட்டர்கள் இலங்கை மின்சார சபையினால் வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 31-05-2018 அன்று குறித்த அறக்கட்டளை பணம் செலுத்தாதது தொடர்பாக ஆணையத்தின் சட்ட அதிகாரி இடைக்கால நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

உரிய தொகையை 14 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் வழக்கு தொடரப்படும் என சட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாமல் ராஜபக்ஷவின் அமைப்பினால் உரிய தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என ரஞ்சன் ஜயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம் : மவ்பிம

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒற்றுமையைப் பேண புதிய தலைமை வேண்டும் – சமிந்த

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு புதிய தலைமை தேவை என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வாதியாக ‘ஹரக் கட்டா’ – குற்றவாளிகளாக டிரான் – தேஷபந்து

"ஹரக் கட்டா" என்றும் அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றவாளியான நந்துன் சிந்தக விக்ரமரத்ன, கடந்த 14 ஆம் திகதி வழக்கு...

ஜனாதிபதி சட்டத்திற்கு மேல் இருந்து ஆட்சி அமைக்கிறார் – முஜிபுர்

தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிய போதும், ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால், அதற்கு...