பொப் மார்லி கைது

830

காலி – ஓபாத – வீரப்பன பிரதேசத்தில் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரரான பொப் மார்லி என்ற​ழைக்கப்படும் சமிந்த தப்ரு உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஓபத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி பேருவளை கடற்கரையில் 300 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 288 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரும் இந்த பொப் மார்லி ஆவார்.

43 வயதான சந்தேக நபர் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் மாலபே தலஹேன பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பொப் மார்லி உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரும் இன்று உடுகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here