மைத்திரி உள்ளிட்டோரின் சொத்துக்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கோரிக்கை

634

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான நட்டஈட்டை முழுமையாக வழங்கத் தவறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரங்கள் மூலம் சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டது.

டிசம்பர் 30ஆம் திகதிக்குள் பிரமாணப் பத்திரங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here