ஏழு விக்கெட்டுக்களால் ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி

283

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் 7 விக்கெட்டுக்களால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.

அவ்வணி சார்பில் Sybrand Engelbrecht 58 ஓட்டங்களையும், Max ODowd 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் மொஹமட் நபி 28 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்படி, 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Rahmat Shah 52 ஓட்டங்களையும் மற்றும் அணித்தலைவர் Hashmatullah Shahidi ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்

இந்த வெற்றியை தொடர்ந்து 4 வெற்றிகளுடன் ஆப்கானிஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here