follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1பொஹொட்டுவவிடமிருந்து ஜனாதிபதிக்கு நான்கு கோரிக்கைகள்

பொஹொட்டுவவிடமிருந்து ஜனாதிபதிக்கு நான்கு கோரிக்கைகள்

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நான்கு விசேட கோரிக்கைகளை முன்வைத்து, உடனடியாக அமுல்படுத்துமாறு கோரியுள்ளது.

சமுர்த்தி மானியத்தை தொடர வேண்டும், உர மானியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பரவலாக்கப்பட்ட ஒதுக்கீட்டை மீள வழங்க வேண்டும், அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பின் போது வேலைவாய்ப்பை இழக்கக்கூடாது என்பனவே நான்கு கோரிக்கைகளாகும் என கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

கட்சியின் செயலாளரின் கையொப்பமிடப்பட்ட கடிதத்தில் இந்த நான்கு கோரிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கான சிறந்த பொறிமுறை சமுர்த்தி இயக்கம் எனவும், எனவே இயக்கத்தின் பெயரை மாற்றுவது பொருத்தமானதல்ல எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மற்ற அதிகாரிகள் யார்?

கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சகான் மற்றும் ஜோல்பா நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள டிஸ்மார் காட்டில் ஹெலிகாப்டர் விபத்தில்...

ரைசியின் மரணம் ஆழ்ந்த வருத்தமளிக்கிறது – வெனிசுலா ஜனாதிபதி

வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro), ரைசியின் மரணத்தால் ‘ஆழ்ந்த வருத்தம்’ அடைவதாக தனது இரங்கல்...

பெரிய வெங்காயத்தின் மொத்த விலை குறைந்தது

சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 50 ரூபாவினால் குறைந்துள்ளது. இதனால் வெங்காய இறக்குமதியாளர்கள் பெரும் சிரமத்திற்கு...