follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1புதிய பொறுப்பு பற்றி அர்ஜுன் கருத்து

புதிய பொறுப்பு பற்றி அர்ஜுன் கருத்து

Published on

கிரிக்கெட் விளையாட்டை மீட்பதற்கு தன்னால் இயன்ற அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கிரிக்கட் மீது தான் கவனம் செலுத்துவதாகவும், அதனை ஏனைய நிர்வாக உறுப்பினர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனவும் தெரிவித்த அர்ஜுன ரணதுங்க, கிரிக்கெட்டுக்கு புதிய வர்த்தக முத்திரையை அறிமுகப்படுத்துவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

நாட்டை நேசிக்கும் வீரர்களை உருவாக்குவதே தனது முதன்மையான பணி எனவும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை முறையாக நிறைவேற்றுவேன் என நம்புவதாகவும் தெரிவித்த அர்ஜுன ரணதுங்க, தமக்கு வழங்கப்பட்டுள்ள பதவியானது அதிகாரத்தினை வைத்து எடுக்கப்பட்ட ஒன்றல்ல எனவும் தெரிவித்தார்.

“விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்துள்ளார். இதை அவர் நீண்டகாலமாக பார்த்துக் கொண்டிருந்தார் என நினைக்கின்றேன். இப்போதைய கிரிக்கெட் நிலவரத்தை வைத்து இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் நியமித்த குழுவிடம் பொறுப்பையும் ஒப்படைத்துள்ளார். எனது கவனம் கிரிக்கெட் பக்கம் அதிகம். நிர்வாகம் தரப்பில் இன்னொரு குழுவும் உள்ளது. அதன் மூலம் இந்த கிரிக்கெட்டை மீட்க விரும்புகிறோம். அதற்கு எங்களால் முடிந்த ஆதரவை வழங்குகிறோம். இந்த முறை இந்த கிரிக்கெட்டை செய்து ஒரு brand இனைஉருவாக்க வருகிறோம். இலங்கை மக்கள் கிரிக்கெட்டினால் சோர்வடைந்துள்ளனர்.

இது இலங்கையில் ஊழல் மிகுந்த நிறுவனமாக மாறியுள்ளது. இதையெல்லாம் மாற்றி கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பும் கிரிக்கெட் அணியையும் நிறுவனத்தையும் உருவாக்கி நாட்டை நேசிக்கும் சில வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை.

நான் சட்டத்தைப் பற்றி பேசவில்லை. நான் அதில் தேர்ச்சி பெற்றவன் அல்ல. ஆனால் இன்று பொதுமக்களின் விருப்பம் என்ன என்பதை புரிந்து கொண்டோம். எங்களுக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது, நாங்கள் அதை எடுப்போம். அதைச் சரியாகச் செய்வது. போகச் சொன்னால் போவோம். இது நாங்கள் வலுக்கட்டாயமாக கேட்டு வந்ததல்ல” என்றார்.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தினால் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இடைக்காலக் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், தற்போதைய கிரிக்கெட் சபை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஐரங்கனி பெரேரா, உபாலி தர்மதாச, சட்டத்தரணிகளான ரக்கித ராஜபக்ஷ, ஹிஷாம் ஜமால்டீன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தியமை மற்றும் இடைக்கால குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06) மாலை அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5  

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்களின் இடர் கடன் தொடர்பான சுற்றறிக்கை

2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் ஆகக் குறைந்தது அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதை கவனத்திற் கொண்டு...

வெசாக் பண்டிகை – நாடு முழுவதும் 7437 தன்சல்கள் பதிவு

வெசாக் பண்டிகைக்காக தற்போது 7,437 தன்சல் ஏற்பாட்டாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூர்...

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்து – விசாரணை ஆரம்பம்

மாதுரு ஓயாவில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த முடியும்...