ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது, குரோஷியாவின் வெளியுறவு அமைச்சர் Gordan Grlic Radman, ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் Annalena Baerbock முத்தமிட்டதற்காக விமர்சிக்கப்படுகிறார்.
குரோஷிய வெளியுறவு அமைச்சர் ஜேர்மன் வெளியுறவு அமைச்சரை முத்தமிட்டதாக விமர்சிக்கப்பட்டார், ஏனெனில் அவர் அவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினார் மற்றும் அது அவரது விருப்பத்திற்கு மாறாக முத்தம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
முத்தம் குறித்து, ஜேர்மன் வெளியுறவு அமைச்சர், சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளில் தனது மறுப்பைக் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குரோஷிய ஊடகங்களுக்கு Gordan Grlic Radman கருத்து தெரிவிக்கையில் “இது ஒரு மோசமான தருணமாக இருக்கலாம். யாராவது அதில் ஏதேனும் தவறினை கண்டால், புண்பட்டிருந்தால் நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்ன பிரச்சினை என்று எனக்குத் தெரியவில்லை. நான் இவ்வளவு விபரீதம் ஆகும் என அறிந்திருக்கவில்லை. நாங்கள் எப்போதும் ஒருவரையொருவர் அன்புடன் வாழ்த்துகிறோம். இது சக ஊழியர்களுக்கிடையேயான ஒரு அன்பான மனித தொடர்பு.” எனத் தெரிவித்துள்ளார்.