இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடியாக தலையிட்டு பலஸ்தீன குடிமக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேலிய ஹமாஸ் நெருக்கடி தொடர்பான நீண்ட கலந்துரையாடலின் போது, ஈரான் ஜனாதிபதி ரைசி, இந்தியப் பிரதமர் மோடியிடம் தொலைபேசி அழைப்பில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் நெருக்கடியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என இந்திய பிரதமர் மோடியிடம் ஈரான் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் காஸாவில் 10,000க்கும் மேற்பட்ட பலஸ்தீன பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
யூத இஸ்ரேல் முஸ்லிம் பலஸ்தீனியர்களை ஒடுக்குவது தவறு என்றும், பலஸ்தீன மக்களின் பாதுகாப்பிற்காக ஒட்டுமொத்த உலகமும் இஸ்ரேலை எதிர்க்க வேண்டும் என்றும் இந்திய பிரதமர் மோடியிடம் ஈரான் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.