follow the truth

follow the truth

May, 20, 2025
Homeஉலகம்காஸாவில் தினசரி குழந்தைகள் இறப்பு 160 ஆக உயர்வு

காஸாவில் தினசரி குழந்தைகள் இறப்பு 160 ஆக உயர்வு

Published on

இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்கொண்டு காஸா பகுதி தற்போது மனித உயிர்களை நொடிக்கு நொடி பலிவாங்கும் இடமாக மாறியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் காஸா பகுதியில் தினமும் 160 சிறுவர்கள் உயிரிழந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பிறகு தொடங்கிய போர் தற்போது காஸா நகரின் மையப்பகுதியிலும் பரவியுள்ளது.

காஸா நகருக்குள் தங்கள் துருப்புக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத் தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.

இதேவேளை, காஸா நகரில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்றுவதற்காக 04 மணித்தியால மனிதாபிமான வழிப்பாதையை திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

1967ல் இருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீன குழந்தைகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு கடந்த மாதத்தில் இறந்துள்ளதாக காஸா சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காஸாவில் தினமும் 160 குழந்தைகள் இறக்கின்றனர்.

இதற்கிடையில், காஸா மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின்படி, நாளாந்தம் 50 முதல் 100 லீட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும் குடும்பம், தற்போது அனைத்துத் தேவைகளுக்கும் 03 லீட்டர் நீரையே பயன்படுத்துகிறது.

அவர்களில் பெரும்பாலோர் அசுத்தமான அல்லது கடல் நீரைப் பயன்படுத்துகின்றனர்.

இதனிடையே, பலஸ்தீன ஜனதிபதி மஹ்மூத் அப்பாஸ் பயணித்த வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அங்கு அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார், ஆனால் ஜனாதிபதி காயமடைந்தாரா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள ‘சன்ஸ் ஆஃப் அபு ஜண்டால்’ கும்பல், இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்காக அவரை குறிவைத்ததாகக் கூறியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...