“அவரது மாமாவுக்கு கொலை செய்யத்தான் தெரியும், சும்மா உட்காரும்..”

1227

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக அமலுக்கும் இடையே இன்று (11) நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது;
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச :

“.. தான் வருந்துகிறேன், நேற்றைய தினம் நாம் கூட்டாக நிறைவேற்றிய பிரேரணையின் வெற்றியானது ஒரு தோல்வியா எனக் கேட்கிறேன். நாம் அனைவரும் ஒன்றாக கூடி எடுத்த தீர்மானம் சபாநாயகர் அவர்களே நீங்கள் அறிவித்த தீர்ப்பு தோல்வியா எனக் கேட்கிறேன். இந்தப் பைத்தியத்துக்கு தெரிவதில்லை. அவருக்கு கொலை செய்ய மட்டும் தான் தெரியும். அவரது மாமாவுக்கும் கொலை செய்வதைத் தவிர வேறொன்றும் தெரியாது. சும்மா உளறாது உட்காரு, எருமை மாடு.. நான் கூற விரும்புகிறேன், இவ்வாறு கூச்சலிடுவது இலங்கை கிரிக்கெட் இனது கப்பப் பணம், திருடப்பட்ட பணம், இலஞ்சப் பணம். நான் நேற்று வாக்கெடுப்பு கோரியதும் இவ்வாறான திருடர்களின் முகத்திரையினை கிழிக்கவே.. உனது வாய்க்கு நான் பயமில்லை..”

நாடாளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக அமல் :

“.. 88, 89 களைப் போன்று இவரது தந்தையைப் போன்று கொலை செய்யவில்லை. இவரது அம்மாவின் புகைப்படத்தினை எடுத்ததற்காக கொலை செய்யவில்லை. சகோதரி திருடியது போல் போலி நாணயத்தாள்கள் அச்சிடவுமில்லை…”

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச :

“.. இவர்களது பதிவிடமும் எனது தந்தை கொடுத்தது தான்.. ஐயோ அம்மா.. டி.எம்.தசநாயக்கவுக்கு அவர்களுக்கு இடம் கொடுத்ததும் எனது தந்தை தான். வெட்கம்…”

நாடாளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக அமல் :

“.. டி.எம்.தசநாயக்க என்பவர் இந்நாட்டின் முக்கிய அரசியல்வாதி ஒருவர். அவர் ஒருபோதும் கொலை செய்ததில்லை. இவர்கள் போன்று கொலை செய்ததில்லை..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here