‘கிரிக்கெட்டை மீண்டும் நிலை நிறுத்த கடுமையாக உழைக்கிறோம்’

683

கிரிக்கெட்டை மீண்டும் நிலை நிறுத்துவதற்கு கடுமையாக உழைத்து வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் பதில் செயலாளர் க்ரிஷாந்த கபுவத்த தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“கிரிக்கெட்டை மீண்டும் நிலைநாட்ட நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். அதையே செய்ய அமைச்சரையும் அழைக்கிறோம். இந்தப் பிரச்சினையை இங்கேயே தீர்த்து வைப்போம். தலைவர் அடுத்த வாரம் அந்தக் கூட்டத்திற்குச் செல்வார். அது வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.”

“இப்போது இது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகத் தொடருக்கு செல்ல முடியாத நிலை. ஜனவரியில் நடைபெறவிருந்த கிரிக்கெட் வசந்தம் சீர்குலைந்துவிட்டது.”

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (11) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

ஐ.சி.சி இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தியமை நேற்று திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் முதல் இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கப்பட்ட இந்த முடிவெடுத்துள்ளதாக அதன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், நடந்த சம்பவத்தால் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை கிரிக்கெட் உறுப்பினராக அதன் நடவடிக்கைகளை சுதந்திரமாக நிர்வகிப்பதற்கும், அரச நிர்வாகத்தின் ஒழுங்குமுறை அல்லது நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்துவதுவதையும் மீறியுள்ளதாக ஐ.சி.சி பேரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மேலும் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here