தேர்தல் முரண்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம்

209

எதிர்வரும் தேர்தலில் நடக்கவுள்ள தேர்தல் முரண்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் தேர்தல் சர்ச்சைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனைகள் குறித்த அனைத்து தகவல்களையும் மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

வேட்பாளர்களுக்கிடையிலான தகராறுகள், தேர்தல் பிரசார அலுவலகங்கள் எரிப்பு, தாக்குதல்கள் போன்ற பல்வேறு சம்பவங்களின் போது கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெரிவிப்பதில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், தண்டனையின் கீழ் சம்பந்தப்பட்ட நபர்களின் குடிமை உரிமைகள் பறிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்பதால், அத்தகைய தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்று தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த தேர்தல்களில் இடம்பெற்ற தேர்தல் முரண்பாடுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்த தகவல்களை சேகரிக்க உள்ளதாகவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த தகவல்கள் அனைத்தும் தேர்தல் இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here