நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 398 ஓட்டங்கள்

185

2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 398 என்ற வெற்றி இலக்கை நியூசிலாந்து அணிக்கு நிர்ணயித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் Virat Kohli 117 ஓட்டங்களையும், Shreyas Iyer 105 ஓட்டங்களையும், Shubman Gill 80 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதனை தொடர்ந்து இன்று சச்சினின் அதிக முறை ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

இதுவரை ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 49 முறை சதங்கள் அடித்துள்ளார்.

அதனை விராட் கோலி 50 சதங்கள் அடித்து முறியடித்துள்ளார்.

நியூசிலாந்து பந்து வீச்சில் Tim Southee 3 விக்கெட்டுக்களையும், Trent Boult 1 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

இதற்கமைய, நியூசிலாந்து அணிக்கு 398 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here