follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP1புதிதாக 100 பொருட்களுக்கு VAT வரி

புதிதாக 100 பொருட்களுக்கு VAT வரி

Published on

வெட் வரி (VAT Tax) அறவிடப்படாத 100 பொருட்களுக்கு வெட் வரி அறவிடப்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று தெரிவித்தார்.

வரவு செலவு திட்டம் குறித்த பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி 133 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளார்.

அதேநேரம் புதிய வரிகள் ஊடாக 800 பில்லியன் ரூபாயை அறவிட திட்டமிடப்பட்டுள்ளது.

உதாரணமாக சம்பளம் 100 ரூபா அதிகரிக்குமாயின் வரி 600 ரூபாயாக அதிகரிக்கும்.

வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு வரி அறவிடப்போகின்றனர்.

தொலைபேசி, கணனி, அனைத்து மின்சாதன பொருட்களுக்கும் வரி அறவிடப்போகின்றனர்.

அதேநேரம் அனைத்து மருத்துவ உபகரணங்களுக்கும் 18 வீதம் வரி அறவிடப்படப் ​போகிறது.

தேயிலை கொழுந்து உள்ளிட்ட மேலும் பல பொருட்களுக்கு வெட் வரியை அறவிடப்போகின்றனர்.

எனினும் இது எவற்றையும் ஜனாதிபதி வரவு செலவு திட்ட உரையில் வௌியிடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...