follow the truth

follow the truth

July, 6, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாநீதிமன்ற வளாகத்தில் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

நீதிமன்ற வளாகத்தில் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

Published on

கலகெதர நீதவான் நீதிமன்றத்திற்கு தனது தாயாருடன் நீதிமன்ற நன்னடத்தை அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்திருந்த 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 58 வயதுடைய நபர் ஒருவர் கலகெதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக சிறுமி நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

சிறுமியின் தாயார் நன்னடத்தை அலுவலக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமி மற்றும் அவரது தாயாரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்த பொலிஸார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக கலகெதர வைத்தியசாலையின் மாவட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கலகெதர பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை - நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும் அபாயம் – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை தற்போதைய...

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது....

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...