முதியோருக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள்

124

இலங்கையில் முதியோர் சமூகத்தின் நலனுக்காக தேசிய மட்டத்தில் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றின் நன்மைகள் மேலும் திறம்பட பகிரப்படுவதற்கு, பரவலாக தேவைப்படுவதாக முதியோர் செயலகத்தின் தேசிய இணைப்பாளர் ஏ.அஸ்ரின் தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த தேவாலயம் மற்றும் கொழும்பு Deflink நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த ஊடக விழிப்புணர்வு செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 70 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு மாதாந்தம் 2000 ரூபா உதவி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 410,667 பேர் பயனடைந்து வருகின்றனர். மேலும் 100,150 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

இந்த 2000 ரூபாய் உதவித்தொகையில் 100 ரூபாய் கழிக்கப்பட்டு, தனி நிதியில் முதலீடு செய்து, அதே பணத்தை 2019 முதல் முதியோர் நலப் பணிகளுக்கு பயன்படுத்துகிறாேம். மக்கள் இதை அறியாததால், சில காலத்திற்கு முன்பு அதைப் பற்றி. தவறான அணுகுமுறை உருவானது.

இலங்கையில் தற்போது 346 முதியோர் இல்லங்கள் உள்ளதாகவும், அதில் 6 இல்லங்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு சொந்தமானவை எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், வேலைக்குச் செல்பவர்களின் வசதிக்காக முதியோர்களுக்கான பகல்நேர பராமரிப்பு மையங்களை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அதன் கீழ் முதியோர்களை பராமரிப்பது குறித்த பயிற்சி வகுப்புகளும் செயல்படுத்தப்படும் என்றார்.

அத்துடன் முதியோர் நலனுக்காக நடமாடும் மருத்துவ மனைகள் நடத்தும் திட்டம் உள்ளதாகவும், அங்கு மருத்துவர்கள் வீடுகளுக்குச் சென்று முதியோர்களை பரிசோதித்து ஒரு மாதத்திற்குத் தேவையான மருந்துகளை இலவசமாக வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு பிரிவுக்கு அதிகபட்சம் 5 நபர்களுக்கு உட்பட்டு நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், கிராமப்புற மற்றும் பிராந்திய முதியோர்களால் வயோதிபர்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் வெளியூர் பயணங்களுக்கு தேசிய முதியோர் செயலகம் அனுசரணை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here