வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால இன்று (23) தெரிவித்தார்.
தற்போது கல்வி மற்றும் ஏனைய விடயங்களுக்காக வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் பற்றாக்குறை காணப்படுவதாகவும், கல்விக்காக வெளிநாடு செல்லும் வைத்தியர்கள் நாடு திரும்பாத நிலையும் தற்போது குறைந்து வருவதாகவும் மஹிபால தெரிவித்தார்.
எதிர்காலத்தில், விழிப்புணர்வு மற்றும் வசதிகள் மூலம் வெளிநாடு செல்லும் மருத்துவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க முடியும் என சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.