ஷானி 100 கோடி ரூபாய் இழப்பீடு கோருகிறார்

553

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், கொழும்பு குற்றப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, பொலிஸ் மா அதிபர் ஜகத் நிஷாந்த மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் ஊடாக, கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாமின் கொலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் தமக்கு எதிராக தீங்கிழைக்கும் நோக்கத்துடனும் பழிவாங்கும் நோக்கத்துடனும் விசாரணைகளை மேற்கொண்டதாக ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.

மேல்மாகாண பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் தீர்மானத்திற்கு அமைய இந்த விசாரணை நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விசாரணைகளின் போது, ​​கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த ஆகியோர் தனக்கு எதிராக பொய்யான வாக்குமூலங்களை வழங்குமாறு பல்வேறு நபர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக ஷானி அபேசேகர தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பிரதிவாதிகள் கைது செய்யப்பட்டு கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பல மாதங்களின் பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஊடாக, ஷானி அபேசேகர இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here