follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்பு

சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்பு

Published on

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக வெளியே அழைத்து வரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருக்கும் சில்க்யாரா சுரங்கப்பாதை கட்டுமானத்தின் போது கடந்த நவம்பர் 12ஆம் திகதி சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தபோது சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கினர். தொழிலாளர்களை மீட்கும் பணி 17வது நாளாக இன்றும் நடைபெற்றது.

உயிர் வாழத் தேவையான ஆக்சிஜன், உணவு, தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டன.41 தொழிலாளர்களையும் பத்திரமாக வெளியே கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொசொன் தான நிகழ்சித் தொடர் குறித்து கலந்துரையாடல்

சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளை முதன்மைப்படுத்திய பொசொன் தான நிகழ்சி தொடர் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...

தேசபந்து தென்னக்கோனை விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு அறிவிப்பு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...