கடன் கொடுத்த நாடுகளிடமிருந்து இலங்கைக்கு நிவாரணம்?

237

ஜப்பானின் Jiji News இனை மேற்கோள்காட்டி, கடன் வழங்கும் நாடுகளின் குழு இலங்கைக்கான கடன் நிவாரணம் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க ஒரு உடன்பாட்டை எட்டக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், Jiji News அதற்கான ஆதாரத்தை பெயரிடவில்லை மற்றும் மூலத்தைப் பற்றிய எந்த தகவலையும் குறிப்பிடவில்லை என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த குழுவிற்கு ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து தலைமை வகிக்கின்றன.

இலங்கையின் மிகப்பெரிய இருதரப்புக் கடன் வழங்குநராக சீனா விளங்குவதுடன், குழுவில் உறுப்பினராகச் சேர்வதை தவிர்த்துள்ளது.

பல தசாப்தங்களுக்குப் பின்னர் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, கடனாளிகளுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை எட்டுவதற்கு கடந்த ஆண்டு முதல் முயற்சித்து வருகிறது.

சுமார் 4.2 பில்லியன் டாலர் நிலுவையில் உள்ள கடன்கள் தொடர்பாக சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியுடன் ஒப்பந்தத்தை எட்டிய ஒரு மாதத்திற்குப் பிறகு, கடன் வழங்கும் நாடுகளின் குழுவுடனான இலங்கையின் ஒப்பந்தம் ஏற்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் முதல் மதிப்பாய்வை டிசம்பர் 6 ஆம் திகதிக்குள் முடிக்க EXIM ஒப்பந்தம் இலங்கைக்கு உதவும் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, சுமார் 334 மில்லியன் டொலர் பெறுமதியான கடனின் இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்ள முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here