follow the truth

follow the truth

July, 8, 2025
Homeவிளையாட்டு"குஜராத் அணியின் தலைமையை கேன் வில்லியம்சனுக்கு வழங்கியிருக்கலாம்"

“குஜராத் அணியின் தலைமையை கேன் வில்லியம்சனுக்கு வழங்கியிருக்கலாம்”

Published on

ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் அடுத்த மாதம் 19ம் திகதி நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதன்படி ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதனால் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சுப்மன் கில் நல்ல வீரர் தான். ஆனால் அந்த சீனியர் வீரருக்கு கேப்டன் பதவியை கொடுத்திருக்கலாம் என தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏபிடி வில்லியர்ஸ் தெரிவிக்கையில்;

“.. சுப்மன் கில் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானர். ஆனால் குஜராத் அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் சீனியர் வீரரான கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் வாய்ப்பை கொடுத்திருக்கலாம். குஜராத் அணியின் முடிவு பலனளிக்கலாம். நான் அதைத் தவறு என்று சொல்லவில்லை.

2025-ல் கில் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு சிறந்த வாய்ப்பு என்று நான் கூறுகிறேன். இருந்தாலும், நான் உற்சாகமாக இருக்கிறேன். அவர் கேப்டனாக முன் நின்று வழிநடத்துவதை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன்…”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் குசல் மெண்டிஸ் சதம்

இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் ஒருநாள் போட்டிகளில் தமது ஆறாவது சதத்தைப் பெற்றுள்ளார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு...

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முக்கியமான இறுதிப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற...

இலங்கை T20 குழாம் அறிவிப்பு – தசுன், சாமிக்க மீண்டும் அழைப்பு

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட T20 தொடருக்கான இலங்கை அணி குழாம் இன்று (7)...