follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுVAT விலக்களிப்பை நீக்குவது UBER - PickME கட்டணங்களை பாதிக்காது

VAT விலக்களிப்பை நீக்குவது UBER – PickME கட்டணங்களை பாதிக்காது

Published on

ஒரு சில பொருட்களுக்கான பெறுமதி சேர் வரி (VAT) விலக்களிப்பை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட மற்றும் இலகுவாக்கப்பட்ட பெறுமதி சேர் வரியை (SVAT) நீக்குவது தொடர்பான ஏற்பாடுகள் உள்ளடங்கிய பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு கவனம் செலுத்தியது.

அம்பியுலன்ஸ் மற்றும் வைத்திய உபகரணங்களும் ஏன் VAT வரிக்கு உட்படுத்தப்படுவது ஏன் என அதிகாரிகரிகளிடம் குழு வினவியது. பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தை பரிசீலித்த பின்னர், அரசாங்க நிதி பற்றிய குழுவினால் முன்வைக்கப்பட்ட திருத்தம் நிதி அமைச்சினால் உள்வாங்கப்படும் எனும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், வைத்திய உபகரணங்கள், அம்பியுலன்ஸ், உரங்கள் மற்றும் அதி உயர் புரத விவசாய உணவுகள் மற்றும் விவசாயப் பொருட்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள தானியங்களினால் பெற்றுக்கொள்ளும் உணவுகளுக்கு VAT விலக்களிப்பு செய்வது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளிடம் குழு கேட்டுக்கொண்டது.

VAT விலக்களிப்பை நீக்குவது UBER மற்றும் PickME கட்டணங்களில் தாக்கம் செலுத்துவதில்லை என குழு வலியுறுத்தியது. UBER மற்றும் PickME என்பவற்றுக்கு ஆரம்பத்திலிருந்தே VAT உள்வாங்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இந்த நாட்டில் பெரிய அளவிலான நிதி மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற...

மாணவர் விழுந்த சம்பவம் : சாரதி மற்றும் நடத்துனரின் அலட்சியே காரணம்

வடமேல் மாகாணத்தில் நேற்று (03) பதிவான சிசுசெரிய வகை பாடசாலை பேருந்து விபத்துக்கான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின்...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...